• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜன்தன் கணக்குகளில் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும்-இந்திய ரிசர்வ் வங்கி

November 30, 2016 தண்டோரா குழு

கிராம மக்கள் மோசடியாட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஜன்தன் வங்கி கணக்குகளிலிருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும்.
கே.ஒய்.சி. இல்லாத (அதாவது வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாத கணக்குகள்) அல்லது டெபாசிட் தொகையை எடுப்பதில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ. 5000 மட்டுமே எடுக்க முடியும்.

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக்க ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்து வருவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் அப்பாவி கிராம மக்கள் யாரிடமும் சிக்கி பிநாமி சொத்து பரிவர்த்தனை மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க