• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

June 14, 2021 தண்டோரா குழு

சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும் என கோவை அரசு மருத்துவ முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் கல்லூரியில் பயிலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சம்பள உயர்வை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

அரசு உதவி பெறும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் 70,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படுவதாகவும், ஆனால் அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை என்று தெரிவித்தனர்.

மேலும்,எம்பிபிஎஸ் முடித்து விட்டு இன்டன்சிப் செய்ய கூடிய மாணவர்களுக்கு 20 ஆயிரம் தான் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அதை 30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். ஸ்டைபனையுன் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைத்து தரப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே அதனையும் வருடாவருடம் 10% அதிகரித்து தர வேண்டும் என்று கோரிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க