• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புகார்களை உடனடியாக விசாரிக்க மகளிர் போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கல்

June 11, 2021 தண்டோரா குழு

பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகார்களை உடனடியாக விசாரிக்க மகளிர் போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆண் காவலர்களுக்கு புகார்களை உடனடியாக சென்று விசாரித்திட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினம் கலந்துகொண்டு மகளிர் போலீசாருக்கான இரு சக்கர வாகன செயல்பாட்டினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம்,

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் காவலர்களுக்காக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகார்களை உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்திடவும் அவர்களுக்கு உதவி செய்திடவும் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் மடிக்கணினியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

18 காவல் நிலைய மகளிர் போலிசாரிக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கு ரோட்டரி கிளப்பும் உதவியுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வருடம் தற்பொழுது வரை 25 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்த அவர் கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த வருடம் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் பெண்களின் வன்கொடுமை புகார்களையும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க