• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாமி கும்பிடுவது போல நடித்து அம்மன் நகையை திருடிய நபர் கைது !

June 11, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாளையததில் அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவிலில் இன்று காலை சாமி கும்பிடுவது போல ஒரு நபர் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். பின்னர் கோயிலில் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் பூசாரி கோயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது கோயிலுக்குள் சாமி கும்பிடுவது போல் நின்று கொண்டிருந்த மர்மநபர் அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவ முயன்றார். மீண்டும் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்த மர்மநபர் கோயிலை விட்டு வெளியே செல்ல முயன்ற போது பூசாரி திருடன் திருடன் என சத்தம் போட்டு அந்த வாலிபரை துரத்திப் பிடித்தார்.

பின்னர் அந்த வாலிபரை விசாரித்த பொழுது அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடிச் செல்ல முயன்ற வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பது தெரியவந்தது .மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க