• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 நாளில் கொரோனாவுக்கு 4 வழக்கறிஞர்கள் உயிரிழப்பு

May 25, 2021 தண்டோரா குழு

கோவையில், கடந்த 3 நாட்களில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த வழக்கறிஞர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர்.

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், கடந்த 18 முதல் நீதிமன்ற பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜாமீன் மனுக்கள் மீது மட்டும் வாரத்தில் ஒரு நாள், ஆன்லைன் வாயிலாக விசாரணை நடக்கிறது.

நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
நீதிமன்றத்துக்கு வராமல் இருந்த போதிலும் தொற்று பாதிப்பு குறையவில்லை.இதுவரை 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களும்,50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் பழனிச்சாமி 79, உயிரிழந்தார்.இந்நிலையில்,கடந்த 3 நாட்களில் மட்டும் 4 வழக்கறிஞர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் கிறிஸ்டோபர்,65, சுலோச்சனா,78, தாராபுரம் அய்யாசாமி,64, ஆர்.எஸ்.புரம் ராஜேந்திரன்,56, ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க