• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் – முக.ஸ்டாலின்

May 21, 2021 தண்டோரா குழு

கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன்.கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது.2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம்.

தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மே 2-ம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கலைஞர் பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ம் தவணை ரூ.2ஆயிரம் வழங்க நடவடிக்கை. ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்.

மேலும் படிக்க