• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு

May 21, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 7 ஆயிரத்து 261 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்ப நிலையில் தற்போது 13 ஆயிரத்து 546 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை கடந்து விட்டது. இதில் 90 ஆயிரம் பேர் வரை குணமடைந்து விட்டனர். இருப்பினும் கோவையில் தினசரி பாதிப்பு 3000 கடந்து செல்கிறது. கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு காலி படுக்கைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இந்நிலையில் அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதார துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

” கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 7261 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தற்போது அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 546 ஆக உள்ளது,” என்றார்.

மேலும் படிக்க