• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு முழு ஒத்துழைப்பு அளிக்கும்

May 19, 2021 தண்டோரா குழு

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு, நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருவது பாராட்டுக்கு உரியதாகும்.அதே நேரத்தில் கோவை மாவட்டத்தில் இந்த நோய்த்தொற்றுப் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களாக இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000த்தை கடந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் இன்னும் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பது நிலைமையை எதிர் கொண்டு மேம்படுத்த உதவும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து.

இது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவை மாவட்ட தொழில் வணிக அமைப்புகளின் கூட்டுக்குழு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிட தயாராக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க