• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர காவல் ஆணையராக தீபக் எம். தாமோர் பொறுப்பேற்பு !

May 17, 2021 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக தீபக்.எம்.தாமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர காவல் ஆணையராக சுமித் சரண் பணியாற்றி வந்தார்.சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.இவருக்கு பதிலாக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.

இவர் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார்.தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை மேற்கு மண்டல போலீஸ் செய்து அமல்ராஜ் கூடுதலாக கவனித்து வந்தார் .தற்போது கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக தீபக்.எம்.தாமோர் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.

இவர் இதற்கு முன் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றினார். 2016 – 17 ஆம் ஆண்டு கோவை சரக டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் வழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க