• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு

May 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் மெக்ரிக்கர் சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட
பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பெறுகின்றனவா? எனவும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்படுகிறதா?
எனவும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்திட வேண்டுமெனவும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன்,
நகர் நல அலுவலர் ராஜா
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க