• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.2,000 உதவித்தொகை விநியோகம் ரேசன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் : ஆட்சியர்

May 15, 2021 தண்டோரா குழு

ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலமாக ரூ.2,000 வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, மே 10 ஆம் தேதி முதல் மாவட்டத்தில் அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, ரேசன் கடைகளுக்கு மாதத்தில் முதல் 2 வெள்ளிக்கிழமைகளை பணி நாளாகவும், முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளை விடுமுறை நாளாகவும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, மே 15 ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வழங்கிட அரசு அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமையும் ரேசன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மக்கள், அன்றைய தினம் சென்று பயனடையலாம்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

மேலும் படிக்க