• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக்க கோரிக்கை

November 26, 2016 தண்டோரா குழு

உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றி, ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர்களும் ஊக்க ஊதியம் பெற தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை வெளியிடப்படுவதற்குப் பாடுபட்ட, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி அவர்களுக்குப் பாராட்டு விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவின் போது தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின்படி அனைத்து நிலை உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றம் செய்து, ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்;, மத்திய அரசு ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் சங்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்டன.

இந்த பாராட்டு விழாவில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க