• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தெற்கு தொகுதி – நீண்ட இழுபறிக்கு பின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி !

May 2, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகசட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. கோவை தெற்கு தொகுதியில் இன்று காலையில் இருந்தே கமல்ஹாசன் முதலிடத்திலும், மயூரா ஜெயகுமார் இராண்டாம் இடத்திலும், வானதி ஸ்ரீநிவாசன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.

பின்னர், வானதி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். நீண்ட நேரம் கமல்ஹாசன் முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வானதி சீனிவாசன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்.கடந்த சில மணி நேரங்களாக இருவருக்கும் இடையே மிகசிறிய அளவிலான வாக்குவித்தியாசம் நிலவிவந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் 52,526 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். கமல்ஹாசன் 51,087 வாக்குகளையும், மயூரா ஜெயகுமார் 41,669 வாக்குகளும் பெற்று தோல்வியை தழுவியுள்ளனர்.

மேலும் படிக்க