• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒப்போ-வின் மிக மலிவான, உயர்தர 5ஜி போன் வெறும் 14,990 ரூபாய் விலையில் அறிமுகம்!

April 30, 2021 தண்டோரா குழு

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதனங்களுக்கான ப்ராண்ட்டான ஒப்போ, புத்தம் புதிய ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அனைவரும் வாங்குவதற்கேற்ற கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கும், 5ஜி பயன்பாட்டுக்கான மிக மெல்லிய ஸ்மார்ட்ஃபோன் ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்ஃபோன் 8 ஜிபி நினைவக சேமிப்பு வசதியை அளிக்கிறது. மேலும், மிக ஆற்றல் வாய்ந்த மீடியாடெக்கின் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மிக பெரும் சேமிப்பக வசதி, அதிவேக துரித செயல்பாடு என எதிர்பார்க்கும் இந்த தலைமுறை ஒப்போ ஏ சிரீஸ் ஃபோன்களின் ரசிகர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய ஒரு மேம்பட்ட ஸ்மார்ட்ஃபோன்னாக ஒப்போ ஏ53எஸ் 5ஜி இருக்கும். இதன் விலை 14,990 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகி உள்ளது.

ஏ சிரீஸ் ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிநவீன புதிய தொழில்நுட்பத்தை கைகளில் வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், தங்களுடைய அன்றாட வாழ்விற்கு தொழில்நுட்பம் அளிக்கும் பலன்களையும், மிகக் குறைந்த இடைவெளிகளில் தொடர்ந்து மேம்படுத்தி கொண்டு வருகிறார்கள். மிக உயர்தர செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கும் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி முதல் கண்களைக் கவரும் அழகான திரை மற்றும் மனதை மயக்கும் நவ நாகரீக வடிவமைப்பு என, ஏ சிரீஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் இதுவரையில்லாத சிறந்த மதிப்பை அளிக்கின்றன,

வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த தேவையான அனைத்து முக்கிய அம்சங்களும் உள்ளன என்பது ஏ சிரீஸ் ஸ்மார்ட்ஃபோன்களின் சிறப்பம்சமாகும்.

மேலும் படிக்க