• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடக்கு மண்டலத்தில் 14 வீதிகள் மூடல் மாநகராட்சி கமிஷனர் தகவல்

April 29, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் ஓம்சக்தி நகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி வடக்கு மண்டலம் 41வது வார்டு பகுதிகளில் மொத்தம் 20 ஆயிரம் எண்ணிக்கையிலான குடியிருப்புகள் உள்ளன. இந்த வார்டில் 210 வீதிகள் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிக்கப்பட்ட வீதிகளின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.

இதில் மேற்கொண்டு மற்ற வீதிகளுக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 14 வீதிகளை ஒருவார காலத்திற்கு தடுப்புகள் கொண்டு அடைத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் நோய் தொற்று குறித்த சந்தேகங்களுக்கு மாநகராட்சியின் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனையில் தொற்று அறிகுறி இருப்பின் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

லேசான தொற்று அறிகுறி உள்ளவர்கள் அவர்களது வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பு அமைத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மண்டலம் காந்தி மாநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர் நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க