• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை VGM மருத்துவமனையில் புதிய அதிநவீன பைபிரோஸ்கேன் கருவி அறிமுகம் !

April 19, 2021

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள, VGM மருத்துவமனையில், உலகதரம் வாய்ந்த, புதிய கல்லீரலில் உள்ள குறைகளை கன்டறியும் இயந்திரத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏப்ரல் 19 ம்தேதி உலக கல்லீரல் தினமாக உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு, வருகிறது, இந்த நாளை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களுக்கு கல்லீரல் குறித்தான துல்லியமான சிகிச்சையை அளிக்கும் வகையிலும்,கோவை விஜிஎம் மருத்துவமனையில்,புதிய அதிநவீன பைபிரோஸ்கேன் என்ற கருவியை அறிமுகம் செய்து அதன் துவக்க விழா நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் தியாகராஜன் இந்த புதிய இயந்திரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அதன் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத்,

கல்லீரல் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரு நொடியில் கன்டறியும், இந்த பைபிரோஸ்கேன் என்ற கருவி, இந்தியாவிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது, பஞ்சாப், மும்பையில் இரண்டு இயந்திரங்களும், தமிழகத்தில் கோவையில் நமது மருத்துவ மனையில் மூன்றாவதாக உள்ளது எனவும், உலக தரத்தில், முதன் முறையாக, ஒரு விநாடியில் 200 மடங்கு வேகத்தில் செயல்படும், இந்த இயந்திரம் மூலமாக, கல்லீரலின் கெட்டி தன்மை, கல்லீரல் சுற்றியும் உள்ள கொளுப்பு, போன்ற பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும் வல்லமை கொண்டது.

கல்லீரலில் உள்ள கொழுப்பின் அளவு, அதன் பாதிப்புகளையும் துள்ளியமாக கன்டறிந்து செயல்பட கூடியது தற்போதைய மக்கள், 70 விழுக்காடு கல்லீரல் சேதமடைந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். 70 % சேதமடைந்ததால் அதனை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே காப்பாற்ற முடியும். தற்போதைய உலகில் அளவுக்குப் அதிகமாக மது அருந்தும் பழக்கம், உடல் பருமன், போன்ற பல்வேறு காரணமாக கல்லீரல் பாதிக்கப்படும், எனவும், இந்த சிகிச்சை மூலமாக உடனடியாக அறிமுக நிலையிலேயே கன்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் விஜிஎம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் பிரசாத், மருத்துவர் மதுரா பிரசாத், மருத்துவர் சுமன் பிரசாத் மற்றும் பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க