• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனையில் 4500 டோஸ் தடுப்பூசி இருப்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

April 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவையில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் காலையிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:-

ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்தது. அதன்பின்னர் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே போதிய ஆர்வம் இல்லாமல் இருந்தது. தற்போது நாள்தோறும் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

தற்போது கோவை அரசு மருத்துவமனையில் 4,500 டோஸ் தடுப்பூசிகளும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2,370 தடுப்பூசிகளும் இதுதவிர மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு கொரோனா தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் படிக்க