• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கருப்பக்கவுண்டர் வீதியில் ஒரே வீட்டை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

April 9, 2021 தண்டோரா குழு

கருப்பக்கவுண்டர் வீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒருவார காலமாக அதிகரித்து காணப்படுகிறது.தினமும் 350க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35 வார்டுகளில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே வீட்டை செய்த ஐந்து நபர்களுக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தினால் அந்த வீதியில் உள்ள 15 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படுகிறது.இன்று கருப்பக்கவுண்டர் வீதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இப்பணியினை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க