• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை முதன்மை கல்வி அலுவலர் உஷா பணியிட மாற்றம்

April 8, 2021 தண்டோரா குழு

லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தஞ்சாவூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உஷா நியமிக்கப்பட்டார்.இவர் பணியில் சேர்ந்தது முதல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவை பணம் வசூல் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரேஸ்கோர்ஸ் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் வீட்டில் ரெய்டு நடந்தது இந்த சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர் லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் கோவை மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக தங்களின் பொறுப்பை ஏற்க வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க