• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்காததே இப்பிரச்சனைக்கு காரணம் – வானதி சீனிவாசன் விளக்கம்

April 2, 2021 தண்டோரா குழு

கோவையில் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

உத்தரபிரதேச முதலமைச்சர் கோவை வருகையின் போது நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாக சித்தரித்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்காதது பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிவித்த வானதி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு சதவீதம் கூட பாஜக வஞ்சகம் செய்யவில்லை என்றார்.சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி மற்றும் டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல் வந்துள்ளது எனவும் எந்த மத உணர்வுக்கும் பாஜக எதிரான கட்சியல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சக்திகளை ஒதுக்க வேண்டும் எனவும் கல்வீச்சு சம்பவம் குறித்து உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ் அருண் ஜேட்லி குறித்து பேசியது அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கும் பாஜக குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது எனவும் விமர்சித்த வானதி, வாக்கு வங்கிக்காக பிரிவினையை தூண்டும் அரசியலை திமுக செய்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க