• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலவரக்காரர்களால் மிரட்டப்பட்ட செருப்புக்கடைக்கு நேரில் சென்ற கமல்ஹாசன் !

March 31, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவைக்கு வந்திருந்தார். இதற்கிடையில்,ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த கடைகளை அடைக்க சொல்லி கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் கண்டித்திருந்தார்.”கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்”என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார் .

இந்நிலையில் கலவரக்காரர்களால் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார்.

அப்போது கடை வீதியை சேர்ந்த வணிகர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க