• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பணத் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பணம்

November 21, 2016 தண்டோரா குழு

மத்திய அரசு ஊழியர்களின் பணத்தட்டுப்பாட்டை போக்குவதற்காக, ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.10,000த்தை முன்பணமாக அவரவர் அலுவலகங்களில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி, கடந்த 8 ம் தேதி பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பணத்தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி, மத்திய அரசின் குருப்-சி ஊழியர்கள் தங்களின் சம்பளத் தொகையிலிருந்து முன்பணமாக ரூ. பத்தாயிரத்தை அவர்களின் அலுவலகங்களில் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.10,000 ரொக்கமாக வழங்குவதற்காக வங்கிகளிலிருந்து ரூ.10 கோடி கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ஊழியர்களும் இதே கோரிக்கைகளை முன்வைத்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க