• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த வாகனங்களை உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

March 11, 2021 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். மக்கள் அவர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித் தனியாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடமும், லாரி பணியாளர்களிடமும் கொடுத்திட வேண்டும்.

மண்டல சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர்கள் தினசரி வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை சாக்கடைகளில் கொட்டாதவண்ணம் கண்காணித்திட வேண்டும். சாக்கடைகளில் அடைப்புகள் ஏதும் இருப்பின் அவற்றை உடனடியாக சரிசெய்திடவும் வேண்டும். நீர் தேங்கியுள்ள இடங்களில் தூய்மை பணியாளர்கள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கப்பட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் புகை மருந்துகள் அடிக்கப்பட வேண்டும்.

சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த வாகனங்களை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும். பொது மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்டி சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், அனைத்து மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க