• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிப்பு

March 1, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரையும், வீட்டையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து திமுகவினர், தேர்தல் அதிகாரியிடத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி ஆனந்தகுமார் காரை பார்வையிட்டார். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க