February 22, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் புதிய பட்டதாரிகள் பணி புரியும் வகையில் ஓர் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல் அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் கூறியிருப்பதாவது:
விண்ணப்பதாரர்கள் கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கால அவகாசம் அதிக பட்சம் ஒரு வருடம். வரும் 28ம் தேதிக்குL http://internship.aicte-india.org இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தம் 42 பணியிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.