February 22, 2021
தண்டோரா குழு
தேக்கம்பட்டியில் உள்ள யானை புத்துணர்ச்சி முகாமுக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பெண் யானை (ஜெயமால்யாதா, வயது 18) பாகன்களால் கடுமையாக தாக்கப்படும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்நிலையில்,இது தொடர்பாக
விசாரணை நடத்தப்பட்டு யானையை
தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவியாளர் சிவபிரசாத் ஆகியோரை வனத்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.இதையடுத்து,அவர்கள் கோபி செட்டிப்பாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது அந்த யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.திருச்சேந்தூர் கோவில் பெண் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம் என்பவர்இப்போது யானையினை கண்காணித்து வருகிறார்.இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த யானையை ஆய்வு செய்ய கோயம்புத்தூர் வன கால்நடை அலுவலர் இன்று முகாமுக்கு சென்று யானையினை அவர் முழுமையாக பரிசோதித்ததில் யானைக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.