• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல லட்சம் மதிப்பிலான நகைகள் காரில் தவற விட்ட பெண் – காவல்துறை விசாரணை

February 20, 2021 தண்டோரா குழு

கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் பாபி. இவர் சிசி டிராவல்ஸ் என்ற பெயரில் கால் டாக்சி நிறுவனம் வைத்து உள்ள இவர் கோ டேக்சி, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை இவரது வாகனத்தை கோல்டுவின்ஸ் இருந்து கே.ஜி.மருத்துவமனை செல்ல வாகனம் வேண்டும் என கேட்டு நபர் ஒருவர் காலை 9 மணிக்கு காரை வாடகை எடுத்துள்ளார்.அதில் பெண்கள் உட்பட நான்கு பேர் பயணித்து உள்ளனர். அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிறகு பல்வேறு வாடகைகளை எடுத்துவிட்டு இரவு 9 மணியளவில் ஓட்டுனரும் காரின் உரிமையாளுருமான பாபு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் இருந்தபோது காலை வாகனத்தில் பயணித்த பயணி அலைபேசி மூலம் தொடர் கொண்டு ஏதாவது பை தங்களது காரில் உள்ளதா என கேட்டு உள்ளார். பார்த்து சொல்வதாக பாபு கூறிவிட்டு காரின் டிக்கியை சோதனை செய்தபோது பிக் ஷாப்பர் பை இருப்பதை கண்ட அவர் காரின் டிக்கியில் பை ஒன்று இருப்பதாகவும் அது உங்களுடையதா எனவும் அதில் என்ன இருக்கிறது பையின் அடையாளங்களை கூறுமாறு கேட்டு உள்ளார்.

மேலும் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என சும்மா கேட்ட போது துணிமணிகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்து உள்ளனர். பையை திறந்து பார்த்தபோது பல லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதை கண்ட காரின் உரிமையாளர் இது குறித்து ஓட்டுனர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். காலை அந்த பையுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் ஒப்படைக்க வந்த அவரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டதுடன் பையை தவறவிட்ட நபரை காவல் நிலையம் வர சொல்லி அழைத்துள்ளனர்.

மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் காரில் தவறவிட்ட நிலையில் துணிமணிகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க