• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கோவையில் திறப்பு !

February 16, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

கோவை ஜிவி ரெசிடென்சி பகுதியில் ஆமினி புத்தக நூலகம் என்ற பெயரில் புதிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்ய லாப நோக்கமில்லாமல் துவங்கப்பட்டுள்ள நூலகம் இந்தியாவிலேயே தனியாருக்கு சொந்தமான பெரிய நூலகமாகும். 5 ஆயிரத்து 500 சதுரடி பரப்பளவில் மூன்று மாடி கட்டிடமாக உள்ள இந்த நூலகத்தில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

இதுகுறித்து நூலகத்தின் நிறுவனர் கோவிந்தராஜன் கூறியதாவது

இங்கு நிறைய நூலகங்கள் உள்ளன. அதில் தமிழும் தமிழ் சார்ந்த புத்தகங்கள் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கான புத்தகங்கள் இருப்பதில்லை. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன.இந்த நூலகத்தில் மாதம் ரூ.225 என்ற கட்டணத்தில் நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள முடியும். காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை நூலகம் திறந்திருக்கும்.5 ஆயிரத்து 500 சதுரடியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 2 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.கதை புத்தகங்கள், ஆராய்ச்சி, போட்டி தேர்வுகள், கட்டுரைகள் என பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகங்களை வீடிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு 15 முதல் 30 நாட்களில் திருப்பி கொடுக்கலாம். விரைவில் இந்த வளாகத்திலேயே மக்கள் அமர்ந்து படிக்கும் வகையில் வசதிகள் செய்யப்படும்.வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டாக இளைஞர்கள் அதிகமாக வாசிப்பதை பார்க்கிறோம். இன்னும் அதிக வாசகர்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே இந்த நூலகத்தை லாப நோக்கம் இல்லாமல் துவங்கியுள்ளோம் என்றார்.

மேலும் படிக்க