• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவினர் ஓவியா ஆர்மி மீது கை வைத்துள்ளனர் – இயக்குநர் கரு.பழனியப்பன்

February 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினுடைய 21ம் ஆண்டு விழா நடைபெற்றது.

இதில் இயக்குனர் கரு.பழனியப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு சிற்ப்புரையாற்றினர். இந்நிகழ்வில் சாதி மறுப்பு திருமணம் செய்த 20 ஜோடிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன்,

காதலை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தான் ஒரு நாள் காதலர் தினம் காதலிப்பவர்களுக்கு அனைத்து நாளுமே காதலர் தினம் என்று தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் வரும் செய்தியை முழுமையாக கூட பார்க்காமல் தலைப்பினை மட்டும் பார்த்து கமெண்ட் செய்யபவர்கள் தான் பாஜக வினர். இந்த நாட்டின் பிரதமர் அவரது மனைவியை வைத்து வாழ தகுதியில்லாதவர். வருடத்திற்கு ஒரு முறை பிரதமர் அவரது தாயாருடன் புகைப்படம் எடுத்து பதிவிடுகிறார். ஏன் மனைவிடம் புகைப்படங்கள் எடுப்பதில்லை.

பாஜகவினருக்கு பெண்கள் சிந்திக்கிறார்கள் என்பதுதான் முக்கிய பிரச்சனை. ஓவியா “Go back modi” என்று பதிவிட்டதற்கு புகார் அளித்துள்ளனர். ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணி கொண்டிருக்கின்றனர். ஆனால் ஓவியாவிற்கு ஒரு ஆர்மி உள்ளது. இவர்கள் ராணுவத்தின் மீது கை வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படிப்பில் தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு பொருந்தாது 50% தான் பொருந்தும் என்று சொன்னால் அதை தட்டி கேட்பது திமுக, கம்யூனிஸ்ட், திராவிட கட்சிள் தானே தவிர மற்றவர்கள் எல்லாம் பேசாமல் இருப்பர். அவர்கள் எல்லாம் சசிக்கலா வந்தவுடன் பணத்தை எப்படி பங்கு போட்டு கொள்வது என்பதை தான் நினைத்து கொண்டே இருக்கிறார்கள். பல்வேறு கட்சிகள் பெரியாரின் பிம்பத்தை உடைக்க நினைக்கிறது அது முடியாது என்றும் காதலை வளர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க