• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூரில் ’மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி

February 8, 2021 தண்டோரா குழு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 7) மிகச் சிறப்பாக நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மரம் சார்ந்த விவசாயத்தை காவேரி கூக்குரல் இயக்கம் ஊக்குவித்து வருகிறது. இம்முயற்சி தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் தங்கள் நிலங்களில் மதிப்புமிக்க மரங்கள் நடும் பணியை விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

இப்பணியில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், பொதுமக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாகவும் ‘மரம் நட விரும்பு’ என்ற நிகழ்ச்சி வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இம்மாதம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, இச்சிபட்டி கிராமத்தில் உள்ள விவசாயி திரு.சிவசாமி அவர்களின் நிலத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்று மரக்கன்றுகள் நட்டனர். குறிப்பாக, விவசாயிக்கு வருமானம் தரும் விதமாக செம்மரம், சந்தனம், வேங்கை, ஈட்டி ஆகிய மதிப்புமிக்க 3,200 மரங்கள் 9 ஏக்கரில் நடப்பட்டன.

மேலும் படிக்க