• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார்

February 4, 2021 தண்டோரா குழு

நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய இந்து முன்னணி மற்றும் பாஜக பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அகமது கபீர் அவர்கள் தலைமையில்,கோவை மாநகர காவல் ஆணியாளரிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளாவது தொடர்ந்து இஸ்லாமிய இயக்கத்தை பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தவறாக பேசி வருவதாகவும் ,கடந்த 2நாட்களுக்கு முன் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் ஆகியோர் நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக பேசி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும்,இவர்களது மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகார் மனுவின் போது தமுமுக மாவட்ட துணைத் தலைவர் சிராஜூதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம் பாபு, தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணை செயலாளர் நூறுதீன், ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜுதீன்,ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க