• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாக்கு மூலம் அளித்து தற்கொலை செய்து கொண்ட துப்புரவு பணியாளரால் பரபரப்பு

February 4, 2021 தண்டோரா குழு

கோவையில் தற்கொலைக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்கு மூலம் அளித்து துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பிகே புதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது (40) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ரங்கசாமி என்பவர் நிரந்தர துப்புரவு பணியாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சீதா லட்சுமி என்ற மகப்பேறு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று மதியம் தன்னுடைய வீட்டிற்கு வந்த அவர் வீடியோ மூலம் வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் மருத்துவமனையில் மருந்து கொடுக்கும் பணியை பார்த்து வந்த இருவர் தனியாக ஒரு அறையில் இருப்பதை பார்த்ததாகவும் ,இதனை பழி வாங்கும் நோக்கில் செய்யாத தவரை செய்ததாக மேலிடத்தில் புகார் செய்து அவமானப்படுத்தியதாகவும், மேலும் தனது வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு காரணமாக இருந்த 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரங்கசாமி தற்கொலை செய்துள்ளார்.

தற்போது இந்த தற்கொலை வீட்டியோவானது வைரலாகி வருகிறது. தற்போது இவரின் உடல் கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளாதகவும், இதுவரை சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் படிக்க