• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகளுக்கு வருகிற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

February 3, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு வருகிற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் உட்பட பலரை காதல் வலை வீசி அவர்களை உல்லாசம் அனுபவித்து வீடியோ எடுத்து அதன் மூலமாக மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாதர் சங்கம் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் ஜனவரி 5ம் தேதி சிபிஐ விசாரணையில் பொள்ளாச்சி அதிமுக பிரமுகர் அருளானந்தம், பைக் பாபு,ஹாரன் பால், உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் கோவை கோவை அருகே உள்ள கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இன்றோடு அவர்களுடைய நீதிமன்ற காவல் முடிவடைவதால் பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக போலீசார் அவர்களை நீதிபதி பார்வைக்கு ஆஜர்படுத்தினர். நீதிபதி வருகிற 17-ஆம் தேதி வரை 3 பேருக்கும் நீதிமன்ற காவலை நீட்டித்து மகளிர் நீதிமன்ற தலைமை நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் வருகின்ற 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.

மேலும் படிக்க