• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம்

February 1, 2021

கலவை மருத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் இந்திய மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கலவை மருத்துவ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க வளாகத்தில், அச்சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் வருகின்ற 14 ம் தேதி வரை 14 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் கலவை மருத்துவ முறையினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் இரு சக்கர வாகன பேரணியும் நடத்தினர். ஆயுர்வேதம், சித்தா படித்தவர்கள் இரண்டு பட்டப்படிப்புகளை படித்து 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த முறையினால் மருத்துவர்களும், பொதூமக்களும் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் கலவை மருத்துவ முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க