• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து சித்திரவதை பொதுமக்கள் புகார்

January 30, 2021 தண்டோரா குழு

கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரும்புக்கடை பகுதியில் ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தையை அவர்களது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போத்தனூர் போலீசார் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்த நஜூம்நிஷா – அப்துல்லா ஆகியோரை பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது போலீஸ் விசாரணையில் குழந்தையை நஜூம்நிஷா – அப்துல்லா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து வளர்ப்பு தாய் – தந்தை இருவரிடமும் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க