• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கையில் அடிபட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற ஆறு வயது சிறுமி பலி – மருத்துவமனை மீது பெற்றோர் புகார்

January 28, 2021 தண்டோரா குழு

கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற வந்த 6 வயது சிறுமி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் அடுத்த நீலிகோணம் பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு ஹேமர்னா (6) என்ற மகள் இருந்தார்.கார்த்திகேயேனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த வாரம் குடும்பத்துடன் மைசூருக்கு சிகிச்சை பெற சென்றார். அப்போது தங்கியிருந்த இடத்தில் கதவு இடுக்கில் ஹேமர்னாவின் கைவிரல் சிக்கியது.இதில் கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்றுமுன்தினம் கோவைக்கு திரும்பிய அவர்கள் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் ஹேமர்னாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமர்னா இறந்து விட்டதாக முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கார்த்திகேயனிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் கையில் அடிபட்டு வந்த குழந்தை எப்படி இறந்து போகும்? நன்றாகத்தானே இருந்தது என்று கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்தனர்.

மருத்துவமனை நிர்வாகத்தினர் சரியாக பதில் அளிக்காததால் இது குறித்து நேற்று இரவு சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் குழந்தை ஹேமர்னா இறந்துவிட்டதாக புகார் அளித்தனர்.புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதே நிர்வாகத்தைச் சேர்ந்த சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஏற்கனவே சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சூழலில் மீண்டும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் கையில் அடிபட்ட காயத்திற்கு வந்த ஆறு வயது சிறுமி இறந்த சம்பவம் கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க