• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது

January 26, 2021 தண்டோரா குழு

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் படைத்த எஃப்.பி.ஓ’ என்ற பிரிவில் (Best Performing FPO under the category ‘Governance’) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (ஜனவரி 26) நடந்த 72-வது குடியரசு தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் இவ்விருதினை வழங்கி வாழ்த்து கூறினார். அவ்விருதினை நிறுவனத்தின் தலைவரும் தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் பெற்றுக் கொண்டார்.

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனமானது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆலோசனை படி கடந்த 2013-ம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இதில் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 38 சதவீதம் பேர் பெண் விவசாயிகளாகவும், 70 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாகவும் உள்ளனர்.

இந்நிறுவனம் தேங்காய், பாக்கு மற்றும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.11.13 கோடி ஆண்டு வருவாய் (Annual Turnover) ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு இந்நிறுவனத்துக்கு அவுட்லுக் பத்திரிக்கையானது தேசிய அளவில் ‘சிறந்த எஃப்.பி.ஓ’ என தேர்வு செய்து விருது வழங்கியது. அவ்விருதை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க