• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹோண்டா டூவீலர்ஸ் சார்பில் கோவையில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாட்டம்!

January 20, 2021

கோவை பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் போக்குவரத்து பயிற்சிப் பூங்காவில் 1.92 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சாலை பாதுகாப்பு கல்வி புகடப்பட்டது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை சார்பில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை 360 டிகிரியில் ஊட்டும் வகையில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் அனைவருக்குமான சாலை பாதுகாப்புடன் மோதல் இல்லா சமூகத்தை நோக்கமாகக் கொண்டு, அதனை குடிமக்களுக்குக் கற்பிப்பதற்கான முயற்சிகளை ஹோண்டா துரிதப்படுத்தவுள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள பயிற்சி மையங்கள் மூலமாகவும், தனித்துவமான டிஜிட்டல் வழியிலான ஹோண்டா சாலை பாதுகாப்பு இ-குருகுலம் மூலமாகவும் இதனை மேற்கொள்ளவுள்ளது.

கோயம்புத்தூர் பாலசுந்தரம் சாலையில் அமைந்துள்ள குழந்தைகள் போக்குவரத்து பயிற்சிப் பூங்காவில் 1.92 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வழக்கமான செயல்பாடுகளின் மூலமாகக் கல்வி புகட்டியது ஹோண்டா.

இது பற்றி ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பிராண்ட் அண்டு கம்யூனிகேஷன் பிரிவு மூத்த துணைத்தலைவர் பிரபு நாகராஜ் கூறுகையில்,

சாலைகளில் ஒவ்வொருக்குமான பாதுகாப்பு எனும் தனது லட்சியத்தை நோக்கி 20 ஆண்டுகளாக வேட்கையுடன் செயல்பட்டு வருகிறது ஹோண்டா. ஒவ்வொரு ஆண்டும், இந்திய சாலைகளைப் பாதுகாப்பானதாக ஆக்கும் நோக்கத்துடன் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப் படுகிறது. ஒரு பொறுப்புள்ள கார்பரேட் நிறுவனமாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இ-குருகுலம் மூலமாக சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்துள்ளது. சாலை பொறியியல், மோட்டார் வாகனச் சட்டம், சீரான வாகன நல சரிபார்ப்பின் முக்கியத்துவம், சரியான பயண நுட்பங்கள், சாலை பாதுகாப்புக்கான அடிப்படை விதிகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஹோண்டாவின் பாதுகாப்பு பயிற்றுநர்கள் வலியுறுத்துவார்கள். இந்த முயற்சி மூலமாக புதிய பயணர்கள் மற்றும் ஏற்கனவே இருப்பவர்கள், ஓட்டுநர்கள் அல்லது இளம் குழந்தைகள், பாதசாரிகள், வாகனங்களில் பின்னால் அமர்பவர்கள் என்று அனைத்துவிதமான சாலை பயனர்களுக்கும் விழிப்புணர்வூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது ஹோண்டா என்று தெரிவித்தார்.

இந்த மாதம் முழுவதும் தொடரும் விழிப்புணர்வு நிகழ்வுகளில், கீழ்க்கண்ட சிறப்பு கற்றல்கள் மூலமாக விழிப்புணர்வைப் கோவையில் பரப்பவுள்ளது ஹோண்டா : டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு கியர்கள், சாலை விதிகள், போக்குவரத்து அடையாளங்கள் போன்ற முக்கியமான பாடங்கள் பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும். இதனை களிப்பானதாக மாற்றும் வகையில் சாலை பாதுகாப்பு தொடர்பான புதிர் போட்டி, சுவரொட்டி உருவாக்குதல், ஓவியம் வரைதல் போன்றவற்றை நடத்தவுள்ளது.

புதிய மற்றும் அனுபவமிக்க ஓட்டுநர்கள் பயணர்கள் சாலை பாதுகாப்பு பயிற்றுநர்கள் விபத்து பகுதிகள், நல்ல ஓட்டுநருக்கான விதிகள், வாகன ஆய்வு உள்ளிட்டவை தொடர்பாக பயணர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் டிஜிட்டல் முறையில் கற்பிப்பார்கள். 16 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 100க்கும் மேற்பட்ட சாலை அபாயங்கள் குறித்த அனுபவங்கள் பற்றிய ஒரு சிறப்பு பயணர் பயிற்சி செயல்பாடும் உண்டு.

மேலும் படிக்க