• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொங்கல் பொருட்கள் விற்பனை ஜோர் – ஒரு ஜோடி கரும்பு ரூ.100, ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000

January 13, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது. மக்கள் உற்சாகமாக பொருட்களை வாங்கிச்சென்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கோவையில் உள்ள பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், உக்கடம் மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் மிகவும் உற்சாகத்துடன் வந்து பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கரும்பு, மஞ்சள் குலை, வாழைத்தார், பூக்கள் உள்ளிட்டவை விற்பனை ஜோராக நடைபெற்றது.

கோவையில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட்டுக்கு சேலம் மாவட்டம் மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு கட்டுகள் டன் கணக்கில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டிருந்தன. 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ஒரு ஜோடி கரும்பு ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இதே போல மஞ்சள் கொத்து ஜோடி ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், ஒரு கட்டு ஆவாரம்பூ மற்றும் பூளைப்பூ தலா ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகளவு இருப்பதால் கோவை பூமார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும், முல்லை பூ ரூ.1,800-க்கும், ஜாதி மல்லி ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வந்தி கிலோ ரூ.160, செண்டுமல்லி ரூ.60, துளசி ரூ.30, சம்பங்கி ரூ.140, அரளி ரூ.160, கோழிக்கொண்டை ரூ.80 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் பட்டன் ரோஜா கிலோ ரூ.240 மற்றும் மா இலை ஒரு கட்டு ரூ.10 என விற்பனை செய்யப்பட்டது.

கோவை மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விற்பனையும் களை கட்டியது. இதனால்
கத்தரிக்காய் ரூ.40, தக்காளி ரூ.15 முதல் ரூ.20, பச்சைமிளகாய் -ரூ.30, வெண்டைக்காய் ரூ.30, அவரைக்காய் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.30, முட்டைகோஸ் ரூ.15, சேனைக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20, சிறுகிழங்கு ரூ.40, பீன்ஸ் ரூ.50, பூசணிக்காய்- ரூ.8, முருங்கைக்காய் ரூ.120, கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.20, சவ்சவ் ரூ.25, கருணைக்கிழங்கு ரூ.40, சேம்பு ரூ.50, சீனிக்கிழங்கு ரூ.25, தடியங்காய் ரூ.10, பூசணிக்காய் ரூ.15, சிறியவெங்காயம் ரூ.50 முதல் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டன. அதே போல் பொங்கல் பானை ரூ.60 முதல் ரூ.500 வரை அரிசி படியின் அளவிற்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் படிக்க