• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாஸ்டர் திரைப்படத்தை உற்சாகத்துடன் வரவேற்ற விஜய் ரசிகர்கள்

January 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தலைமை மாணவரணி தளபதி மக்கள் இயக்கத்தினர் மாஸ்டர் திரைப்படத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்தது. ஆனால், திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால் சுமார் 400 திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன.

இதனையடுத்து 50% இருக்கைகளுடன் தமிழகம் முழுவதும் விஜயின் மாஸ்டர் திரைப்படம் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒ டிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்த நிலையில் , திரையரங்கு உரிமையாளர்கள் 1000 திரையரங்குகளில் திரையிட சம்மதித்தனர். பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, ரசிகர்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியபடி ரசிகர்கள் வந்தனர். திரையரங்குகளில் ஒரு இருக்கை விட்டு அமரும் வகையில், இருக்கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், நிறையபேர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச்சென்றனர்.மேலும் பிளாக்கில் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கான பிரத்யேக கட்சியாக அதிகாலை 4 மணிக்கு மாஸ்டர் திரைப்படம் ரீலிஸ் ஆகியது. கோவை மாநகரத்தில் 50 திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.இதனை தொடர்ந்து கோவையில் உள்ள திரையரங்கு முன்பு கோவை மாவட்ட தலைமை மாணவரணி தளபதி மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் தேன் குமார், கார்த்தி, ரியாஸ், கோவை நையூம், செல்வம், விஜய கோபால் ,ராஜ்குமார், செந்தில்குமார், ராஜா, மணிகண்டன், அரவிந்த், முகம்மது ஆசிக் ,பிரசாத், நவீன்குமார் ,கோவிந்தராஜ், பத்ரி ,மாரிராஜ், சரவணன், சதாமண் ஆகியோர் கொண்டாடத்துடன் மாஸ்டர் திரைபடத்தை வரவேற்றனர்.

மேலும் படிக்க