• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் பேசியே யானையை காட்டிற்குள் விரட்டிய வனத்துறை ஊழியர் !

January 9, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் வனத்துறை ஊழியரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை யானை காட்டுமாடு என அதிக அளவில் வனவிலங்குகள் உள்ளது. அவ்வப்போது விலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து சேதப்படுத்தி வருவதும் உண்டு இதேபோல் கடந்த வாரம் தேயிலை தோட்டத்தில் காட்டு யானை ஒரு பெண்ணை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் பலியானார்.

இதையடுத்து வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் விலங்குகள் மற்றும் குடியிருப்புக்குள் வராமல் இருக்க முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று வால்பாறை ஸ்டான்மோர் பகுதியில் குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்தது.யானையை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வந்தனர்.

அப்போது வனத்துறை ஊழியர் கோபி என்பவர் தனது கையை அசைத்து யானையிடம் பேசி அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டினார்.மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானை வனத்துறை ஊழியர் கோபியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் யானையை மக்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.

மேலும் படிக்க