• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்

January 6, 2021 தண்டோரா குழு

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் அதிமுக முக்கிய பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி பெண் ஒருவர் தன்னை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து, இந்த வழக்கில், வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ் ஆகிய 3வரை 2019 மார்ச் 3ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

மேலும், மணிவண்ணன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.விசாரணையில், இவர்கள் பல இளம் பெண்களை ஆசைவார்த்தை குறி பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு, பின் சி.பி.ஐ,க்கு மாற்றம் செய்யப்பட்டு, 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில்,2ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில்,திருப்பு முனையாக தற்போது, அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கொள்கைக்கும்,குறிக்கோளுக்கும் விரோதமாக
செயல்பட்டதால் அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் பதவியில் இருந்து அருளானந்தம் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் -இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க