• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

January 4, 2021 தண்டோரா குழு

ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு பணியாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன் உள்ளிட்ட சங்கங்கள் இனைந்து மாவட்ட கலெக்டர் அலுவகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி பணிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பல்லாயிரக்கணக்கில் தூய்மை பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சம்பளம் மிக மிக குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் இவர்களுக்கு வழங்க வேண்டும். கோவை மாநகராட்சியில் மட்டும் சுமார் 3000 தூய்மைப் பணியாளர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு நாளொனறுக்கு ரூ.375 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இதுவும் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ676 ஆக நியமித்து வழங்க மாவட்ட கலெக்டர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க