• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்லாப்பெட்டி உடைப்பு போராட்டம் நடைபெறும் – தமிழக அரசுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை

January 1, 2021 தண்டோரா குழு

கல்லாப்பெட்டி உடைப்பு போராட்டம் நடைபெறும் – தமிழக அரசுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை

இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டணங்கள் தரிசனம் செய்வதற்காக வசூலிப்பதை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் கல்லாப்பெட்டி உடைப்பு போராட்டம் நடைபெறும் என
தமிழக அரசுக்கு இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்து மக்கள் புரட்சி படை இயக்கத்தின் கொடி அறிமுக விழா இன்று கோவையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பீமான் பாண்டி கொடியை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அனைத்து கட்சிகளும் வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்படும் என்றும், இந்து கோவில்களின் முன்பு பெரியார் சிலை அமைப்பது,பெரியார் சிலையில் வாசகங்கள் வைப்பது போன்ற செயல்களை உடனடியாக தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமியர் பள்ளிவாசல்கள் முன்பும், இதே போன்று சிலைகளில் வாசகங்கள் அமைப்போம் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்து ஆலயங்களில் சிறப்பு கட்டண வழிபாட்டுக்கு கட்டணங்கள் வசூலிப்பதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் இல்லையெனில் N அனைத்து கோயில்களிலும் கல்லாப்பெட்டி உடைக்கும் போராட்டம் நடைபெறும் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில ஊடகப்பிரிவு தலைவர் எம் எஸ் கே செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராம் ராகுல், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், கோவை மாவட்ட இளைஞரணி துணை தலைவர் சூர்யா, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ராஷ்ட்ரிய ஜனதா சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமநாதன், சிவசேனா காவி புலிப்படை நிறுவன மாநில துணைத் தலைவர் புலவஞ்சி போஸ், ஹிந்து தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ் எஸ் எஸ் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க