• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜனவரி மாதம் 3 – ம் தேதி “தமிழக நாயுடு பேரவையின் ஆலோசனை கூட்டம்”

December 30, 2020

நாயுடு பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஜனவரி மாதம் 3 – ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் ஜி.என். மில்ஸ் பகுதியில் கந்தவேல் மஹாலில் (கணேஷ் நகர் – பிஐஏ ஷோரூம் பின்புறம்) நடைபெறவுள்ளது. இதில் மாநில தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு பங்கேற்கிறார்.

இது குறித்து தமிழக நாயுடு பேரவையின் கோவை மாவட்ட தலைவர் வி. ஜெய்சங்கர் நாயுடு கூறும்போது :-

தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001 – ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. தற்போது கோவை மாவட்டத்pல் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. இதில் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் நமது அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த முடிவை தமிழக நாயுடு பேரவையின் மாநிலத்தலைவர் டாக்டர். D. குணசேகரன் நாயுடு சிறப்புரையாற்றுவார் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க