• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த தனியார் கடைக்கு ரூ.1000 அபராதம் – மாநகராட்சி ஆணையர்

December 28, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 28.12.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த தனியார் கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்து, கடை பூட்டப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த தனியார் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.200 மற்றும் நடத்துனருக்கு ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும், முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் 10 நபர்களுக்கு தலா 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க