• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துருக்கி குண்டு வீச்சில் மாவட்ட ஆளுநர் பலி

November 11, 2016 தண்டோரா குழு

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினர் (PKK) நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் டெரிக் மாவட்ட ஆளுநர் உயிரிழந்தார்.இச்சம்பவத்திற்கு குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி (PKK) காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

மார்டின் மாகாணத்தில் உள்ள டெரிக் மாவட்டத்தில் இந்தவெடிகுண்டு வீச்சு வியாழக்கிழமை நடந்தது என்று மார்டின் மாகாண அலுவலகம் தெரிவித்தது.சம்பவத்தில் ஆளுநர் முகமது ஃபடிஹ் சஃபிடுர்க் உள்பட மூவர் பலத்த காயமடைந்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் கஸியன்டெப் நகரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வெள்ளிக்கிழமை இறந்துவிட்டார்.இச்சம்பவம் தொடர்பாக ஆளுநர் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் உள்பட 30 பேர் பிடிபட்டுள்ளனர்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த யாரோ ஒரு மர்ம நபர் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம் என்றும், அதை தொலைவிலிருந்துஇயக்கி வெடிக்கச் செய்திருக்கக் கூடும் அல்லது, அந்தப் பையா யாரோ தெரியாமல் திறந்திருந்து, அப்போது வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஸஃபிடுர்க் கூடுதல் பொறுப்பாக டெரிக் மாவட்டத்தின் ஆளுநராகக் கடந்த ஜூலையில் நியமிக்கப்பட்டார். குர்திஷ் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழமைக் கட்சியான ஜனநாயக மாகாணக் கட்சியினரைப் பதவியலிருந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துருக்கி நாட்டில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக கடுமையான வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியைத் தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. இந்த இயக்கத்தினர் 1984-ம் ஆண்டு தொடங்கிய ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்த் இன மக்கள் அதிகமாக வசித்து வரும் டெரிக் மாவட்டத்தில் வியாழக்கிழமை குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான குர்திஷ் சார்பு மக்கள் ஜனநாயகக் கட்சி குர்திஷ் தென்கிழக்கு பகுதியில் தன்னாட்சிக்காகப் போராடிவரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் தொடர்பு கொண்டதாக அந்நாட்டின் அரசு குற்றம் சாட்டியது.

ஆனால், குர்திஷ் சார்பு மக்கள் ஜனநாயகக் கட்சி எந்த நேரடி இணைப்பும் இல்லை என்று மறுத்ததோடு, எந்த மோதலும் வேண்டாம் என்பதால் ஒரு அமைதியான தீர்மானத்திற்கான பணியை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.

மேலும் படிக்க