• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்னபூர்ணா மசாலாவின் புதிய அறிமுகம்

December 23, 2020 தண்டோரா குழு

உறவினர்கள், நட்பு வட்டாரத்தில், சமையலில் நிபுணரான நீங்கள் இருந்தாலும், பெயர் பெற்ற ஆம்பூர் பிரியாணி அல்லது திண்டுக்கல் பிரியாணி அல்லது தூத்துக்குடி சால்னா வின் ஒரிஜினல் உண்மையான சுவையை கொண்டுவர முடியவில்லையா? அன்னபூர்ணாவில் புதிய தமிழ்நாட்டின் கலவை மற்றும் மசாலா உங்கள் கையில் இருந்தால், பாரம்பரியமிக்க, நகரங்கள், சிறுநகரங்கள், மாவட்டங்களின் சிறப்பு மிக்க உணவை தயாரிக்க முடியும்.

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா, மதுரை மட்டன் சுக்கா மசாலா, திண்டுக்கல் மட்டன் குழம்பு மசாலா, தூத்துக்குடி சால்னா மசாலா, கொங்குநாடு நாட்டுக் கோழி குழம்பு மசாலா, நெல்லை புளிக்குழம்பு மசாலா, செட்டிநாடு மிளகு குழம்பு மசாலா,திண்டுக்கல் பிரியாணி மசாலா மற்றும் ஆம்பூர் பிரியாணி மசாலா போன்ற ஒன்பது வகை அன்னபூர்ணாவின் புதிய கiலீவ மற்றும் மாசாலாக்களைக் கொண்டு சமைக்கலாம்.இவை, 40 கிராம் மற்றும் 80 கிராம் பவுச் மற்றும் கார்டன் பெட்டிகளில் கிடைக்கும். தமிழ்நாட்டில் சிறிய கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து கடைகளிலும் இவை, ரூ. 35 முதல் ரூ.100 வரை கிடைக்கும்.
அன்னபூர்ணாவின் டிஎன் பிளன்ட், மண்டல அளவிலான மசாலா வகைகள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, போட்டியில் இறங்கியுள்ளது.

இப்புதிய வகை மசாலாக்கள் குறித்து,அன்னபூர்ணா மசாலாக்களின் செயல் இயக்குனர் விஜய் பிரசாத் கூறுகையில்,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய சிறப்புமிக்க உணவு வகைகள் உலகஅளவில் பரவியுள்ளன. தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு சுவைகளை உலகில் வேறு எங்கும் அதே சுவையில் தருவது கடினம்.அன்னபூர்ணா துவக்கப்பட்ட 1975ம் ஆண்டு முதல், வாடிக்கையாளர்களின் சுவையையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது, இந்திய பாரம்பரிய உணவு வகைகளை மீண்டும் ஆர்வமுடன் புத்துணர்வுடன் சுவைக்க தொடங்கியுள்ளனர்.இது,அந்தந்த பகுதிகளின்உணவு வகைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த விருப்பம் எங்களது தயாரிப்பிற்கு பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது, என்றார்.

அடிப்படையிலேயே அன்னபூர்ணா, வெற்றிக்கான மிகப்பெரிய, மிக முக்கிய உணவு செய்முறைகளைக் கொண்டுள்ளது. இந்திய மாசாலாக்களையும்,நாட்டின் பாரம்பரிய உணவை பற்றியும் ஆழ்ந்து அறிந்து அவற்றை உருவாக்கியுள்ளது.கடந்த 40 ஆண்டுகளாக வெற்றிகரமான பெயரை பெற்றுள்ள அன்னபூர்ணா, புதிய சந்தையில் நுழைய தயாராகியுள்ளது.இந்த கம்பெனி, கோவையில் 30,000 சதுரடியில் ஒவ்வொரு நாளும் 35 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் திறன்
கொண்ட தொழிற்சாலையை கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுவுடன், விரைவான வளர்ச்சித்திட்டத்துக்கான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க