• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்த அமைச்சர்

December 18, 2020 தண்டோரா குழு

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை சேகரிக்கும் 19 வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் பிரிக்கப்பட்ட மக்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் 13 மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 35.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மக்காத கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் 5 என 18 வாகனங்கள் வாங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் அவ்வாகனங்களின் செயல்பாட்டினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பயனற்ற கல்குவாரிகளை கண்டறிந்து மாநகர பகுதிகளில் சேகரமாகும் கட்டிட கழிவுகளை கொண்டு குவாரிகளை புணரமைத்து பயனுள்ள நிலமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டு அதற்காக கட்டிட கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் மண்டலத்திற்கு ஒன்று எனும் வீதத்தில் 5 வாகனங்கள் வாங்கப்பட்டு முதல்கட்டமாக ஒரு வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க