• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல – சத்குரு

December 16, 2020 தண்டோரா குழு

குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. இது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சமிக்கா ரவி , “இந்தியாவில் விவசாயிகளை விட 2 மடங்கு அதிகமாக குடும்ப தலைவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்காக யார் குரல் கொடுக்கப்போகிறார்கள்?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த பதிவை ரீட்விட் செய்துள்ள சத்குரு, “ஒரு பெண் குடும்ப அமைப்பின் அச்சாணியாக திகழ்கிறாள். வீட்டுத்தலைவியர் தற்கொலை செய்வது சமூகத்திற்கு நல்லதில்லை; இது சமூகத்தின் அடிக்கற்களையே அசைத்துவிடும். நம் உள்நலன் நமக்கு தலையாயதாக மாறவேண்டும் – நம்மை சுற்றியுள்ளோர் நலனை உறுதிசெய்ய இது அத்தியாவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க